போலீசார் முன்னிலையில் கணவன் கண் முன்னே மனைவியைக் கடத்திச் சென்ற கொடூரம்!

  சாரா   | Last Modified : 30 Dec, 2019 03:29 pm
couple-attacked-in-front-of-police-station

கன்னியாகுமரி மாவட்டம் துவரங்காடு பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவரது மகன் பியூட்டலின் (28).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த சரண்யா எனும் பெண்ணை கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாரும் இவர்களது காதலைத் தெரிந்துக் கொண்டு, வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பியூட்டலின் வீட்டினர் கல்யாணத்திற்கு ஒரு கட்டத்தில் சம்மதித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 23-ம் தேதி உறவினர்கள் முன்னிலையில் சரண்யாவைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். 
பெண்ணின் பெற்றோர்கள், மகளைக் காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், சரண்யாவைத் தேடி பியூட்டலின் வீட்டிற்கு வந்த போலீசார், விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வருமாறு திருமணமான காதல் ஜோடிகளிடம் சொல்லி விட்டு சென்றனர். 

                                                                             
கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, புது மனைவியையும் அழைத்துக் கொண்டு உறவினர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார் பியூட்டலின். காவல் நிலையத்திற்கு வெளியே மறைந்திருந்த பெண்ணின் உறவினர்கள், இவர்களை சூழ்ந்துக் கொண்டு சராமாரியாக தாக்கி, காரில் சரண்யாவைக் கடத்திச் சென்றனர். இதில் காயமடைந்த பியூட்டலின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்திருந்த இளம் ஜோடிகளை தாக்கி, பெண்ணை போலீசார் முன்னிலையிலேயே கடத்திய விவகாரம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close