அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம்! பாஜக தலைவரின் மண்டையை உடைத்த அதிமுகவினர்!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 12:23 pm
aiadmk-bjp-clash

சேலம் மாவட்டம், வாழப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர்பட்டி ஊராட்சியில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவை சேர்ந்த வரதன் என்பவர், தனது மனைவி ராஜலட்சுமியை சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளார். வாக்குச்சாவடி அருகே அதிமுக தரப்பினர், வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர். அப்போது, அங்கு வந்த பாஜ பிரமுகர் வரதன், தனது மனைவிக்கு ஆதரவாக வாக்காளர்களிடம் ராந்தல் லைட்டு சின்னத்திற்கு வாக்கு கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அதிமுக தரப்பினர், வரதனை சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்து துரத்தி அடித்தனர். அப்போது, குளிர்பான பாட்டிலால் வரதனின் தலையில் அடித்துள்ளனர். இதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. வரதனின் உறவினர்கள் வந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோதல் சம்பவத்தை அடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close