புது வருஷ கொண்டாட்டம்! 4 கோடி ரூபாய் கஞ்சா சிக்கியது!

  முத்து   | Last Modified : 31 Dec, 2019 11:11 am
customs-officials-seize-rs-4-crore-worth-ganja

இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்பிலான கஞ்சாவை ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி பட்டிணம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்தது சுங்கத்துறை அதிகாரிகள் எஸ்.பி பட்டிணம் கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கடற்கரையில் மறைத்து வைக்கபட்டிருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். அந்த சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்கள் இருந்தன. பின்னர் அதிர் போதைபொருள் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மொத்தம் 380 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு தங்கம் கடத்துவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் காவல்துறையினர் விரட்டிச்சென்றப்போது நடுக்கடலில் கஞ்சாவை போதை கடத்தல் கும்பல் வீசிச்சென்றது குறிப்பிடத்தக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close