தேயிலை தோட்டத்தில் புதையுண்ட பச்சிளம் குழந்தை.. தொழிலாளர்கள் அதிர்ச்சி

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 08:13 am
newborn-baby-care

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கெட்டிகம்பை, குண்டுபெட்டு கிராமம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் வழக்கம்போல் தேயிலைப் பறிக்க சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலைச் செடியின் அருகில் கை கால்கள் வெளியில் தெரியும்படி குழந்தையின் சடலம் ஒன்று தெரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தோட்டத் தொழிலாள பெண்கள் அருகில் சென்று பார்த்தனர்.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் வந்து மண்ணில் புதைக்கப்பட்ட, இறந்த நிலையில் காணப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை பிறந்து சில மணி நேரமே இருக்கும் என்றும் தொப்புள் கொடிகூட அறுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் கூறினர். தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் யார்? எதற்காக தேயிலை தோட்டத்தில் புதைத்துச் சென்றனர்? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close