ஜோதிடம் பார்ப்பதாக மனைவிக்கு பாலியல் தொல்லை.. தட்டிகேட்ட கணவர் கொலை..

  முத்து   | Last Modified : 01 Jan, 2020 08:34 am
astrologer-who-sexually-harassed-woman

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை தட்டிக் கேட்ட கணவன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் பகுதியில், கிருஷ்ணன் - வசந்தா என்ற தம்பதியர் வசித்து வந்தனர். அவர்களுக்கு ராமசந்திரன் என்ற ஜோதிடர் அறிமுகமாகியுள்ளார். கிருஷ்ணன் குடும்பத்தினரின் நன்மைக்காக எனக் கூறி, பல்வேறு பூஜைகளை செய்த ராமசந்திரன், பின்னர் அடிக்கடி வசந்தாவிற்கு தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அப்பெண் தனது கணவர் கிருஷ்ணனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் ஜோதிடர் ராமச்சந்திரனை கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக அவர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினரும் ராமச்சந்திரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், மதுபோதையில் கிருஷ்ணன் வீட்டிற்க்கு வந்த ராமச்சந்திரன், அவருடன் வாக்கு வாதத்தில் ஈபட்டுள்ளார். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கிருஷ்ணனின் வயிற்றில் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணன், சேலம் அரசு மருத்துவமணைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளார். தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெண்ணந்தூர் போலீசார், தப்பியோடிய ராமசந்திரனை தேடிவருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close