கோவை, பெங்களூர் செல்லும் ரயில்களில் தொடர்ந்து நகைகள் கொள்ளை! பிடிபட்ட வடமாநில கொள்ளையர்கள்!

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 10:39 am
northern-territory-youth-arrested-train-robbery

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் பயணிகள் போல் நடித்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 
கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தொடர் கொள்ளை நடப்பதாக ரயில்வே காவல்துறைக்கு புகார்கள் குவிந்தன. இதனையடுத்து ரயில் கொள்ளையர்களை காவல்துறையினர் தனிப்படி அமைத்து தேடி வந்தனர்.

இந்த வேட்டையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த  தீப்ஜோதி(21), சஞ்சுராய்(26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களது தகவலின்பேரில் கிஷோர்(23), அமர்ஜோதிபோரா(23) ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 சவரன் நகை, 9 செல்போன்கள், 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close