பிளஸ்-1 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்.. கருவைக் கலைக்க கொடுத்த மாத்திரையால் உயிருக்கு ஆபத்து 

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 09:19 am
11th-std-girl-student-pregnant-college-student-arrest

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த பிளஸ் ஒன் மாணவி. மாணவியின் பெற்றோர் வெளியூரில் தங்கி பணி செய்து வருவதால் அவர் தனது பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகிறார். மாணவியின் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த், ராசிபுரம் திருவள்ளுவர் அரசுக் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். பள்ளிக்கு பேருந்தில் மாணவி சென்று வரும்போது கல்லூரி மாணவி வசந்துடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். அதன் விளைவால் மாணவி கருவுற்றுள்ளார்.  தன்னை உடனடியாகத் திருமணம் செய்யும்படி மாணவி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மறுத்து கருவைக் கலைத்தால் திருமணம் செய்வதாக வசந்த் கூறி, கருக்கலைப்புக்கான மாத்திரைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். மாணவி 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வசந்த் கொடுத்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். அதையடுத்து மாணவிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாட்டியும் அக்கம்பக்கத்தினரும் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனர்.

மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமானதால், கர்ப்பப் பையையே நீக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவியின் உடல்நிலை மோசமாகி உயிருக்கு போராடி வரும் நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், கல்லுாரி மாணவன் வசந்த்தைக் கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close