வாக்கு எண்ணும் மையத்தில் காவல் ஆய்வாளர் திடீர் மரணம்!

  முத்து   | Last Modified : 02 Jan, 2020 07:48 pm
heart-attack-sub-inspector-dead

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30-ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக உள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை டவுன் புதுகார்கானா தெருவை சேர்ந்தவர் முருகதாஸ் (58). காவல் ஆய்வாளரான இவர் 
திருவண்ணாமலை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில், காவல் ஆய்வாளரான முருகதாஸ் வாக்கு மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தார். திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இங்கு நேற்று இரவு முருகதாஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடன் இருந்த போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாதி வழியிலேயே முருகதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close