உள்ளாட்சி தேர்தல்.. தந்தையின் வெற்றி கொண்டாட்டத்தில் மகன் பலி..

  அனிதா   | Last Modified : 02 Jan, 2020 10:56 pm
son-dies-in-celebration-of-father-s-victory

தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. 

திருப்பூர் அருகேயுள்ள உகாயனூர் ஊராட்சி பொள்ளிகாளிபாளையம் கிராம பஞ்சாயத்து 5வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் சுப்பிரமணியம் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து இவரது மகன் கார்த்தி (21) வெற்றியை சந்தோஷமாகக் கொண்டாடி மத்தளம் அடித்து ஊர்வலமாக வந்த போது உற்சாக மிகுதியால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close