சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தந்தையின் நண்பர் வெறிச்செயல்...

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 08:37 am
man-arrested-for-molesting-girl

சென்னை  ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு, அவளது தந்தையுடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் பஷீர் (23) என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. அச்சிறுமியின் உறவுக்கார பெண் ஒருவர் இது தொடர்பாக தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், பாலியல் தொல்லை அளித்தப்போது சிறுமி சத்தம் போட்டதால் அப்துல் பஷீர் அங்கிருந்து தப்பினார்.

இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிஷை குடித்து தற்கொலைக்கு முயன்றாள். சிறுமியின் அத்தை சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அப்துல் பஷீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் பஷீரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close