ஆப்ரேஷன் முடிந்து வயிற்றில் துணி வைத்து தைத்த மருத்துவர்கள்... கர்ப்பிணி பலியான சோகம்..

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 08:30 am
woman-dies-in-hospital

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெண்ணின் வயிற்றுக்குள் துணியை வைத்து தைத்து அரசு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததால் பெண் உயிரிந்த சோகம் நிகழ்ந்துள்ளது. 
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரது மனைவி பிரியா (23) பிரசவத்துக்காக கடந்த 27ஆம் தேதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றிரவு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்பு அறுவை சிகிச்சை முடிந்ததும் பிரியா உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் சுயநினைவின்றி இருந்ததால் செய்வதறியாது தவித்த உறவினர்கள் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி பிரியாவை உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

புதுச்சேரி மருத்துவர்கள் பிரியாவின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்தபோது அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட துணி இருந்தது தெரியவந்தது. பின்பு மீண்டும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து துணியை எடுத்துள்ளனர். ஆனால் அப்போது சிகிச்சை பலனின்றி பிரியா உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, விருத்தாசலம் டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரியாவின் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close