கூட்டம் அதிகமாக இருந்த பேருந்தில் பாட்டியிடம் செயினை அபேஸ் செய்த கில்லாடி பெண்கள்...

  முத்து   | Last Modified : 03 Jan, 2020 09:25 am
two-women-arrested-jewel-theft

ஓடும் பஸ்சில் மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் செயின் பறித்துவிட்டு தப்பியோட முயன்ற இரண்டு பெண்கள் சிக்கினர். 
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள பகுதி முத்துரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் குஞ்சரம் (62). இவர் ராமநாதபுரத்துக்கு செல்ல ஏறிய பேருந்து அதிகளவில் பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. இதனால் நின்றப்படியே குஞ்சரம் பயணம் செய்தப்போது, பர்தா அணிந்துகொண்டு இருவர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். பின்னர் அவருக்கு இடம் வழங்குவதுபோல் கூறியிட்டு முந்தைய நிறுத்தத்திலேயே இருவரும் இறங்கினர். அப்போதுதான் 2 பெண்களும் குஞ்சரத்தின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து கொண்டு இறங்கியது தெரிந்தது. இதை பஸ்சில் இருந்த சிலரும் கவனித்து கூச்சல் போட்டனர்.

அதிர்ச்சி அடைந்த, குஞ்சரமும் உடனே கீழே இறங்கி அவர்களை பின்னாடியே துரத்தினார். சக பயணிகளும் இறங்கி அந்த 2 பெண்களையும் துரத்தி ஓடி மடக்கி பிடித்தனர். பின்னர் கேணிக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பெண்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் 2 பேருமே முஸ்லிம் பெண்கள் இல்லை என்பதும், பர்தாவை போட்டுக் கொண்டு இப்படி திருட்டுத்தனத்தில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் தெரியவந்தது. மேலும் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த செல்வி, இசக்கியம்மாள் என்பதும் அவர்கள் கூட்டமான பஸ்சில் ஏறி நகை, பணத்தை ஆட்டையை போடுபவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close