ரெண்டு பொண்டாட்டியும் வெற்றி வந்தவாசி விவசாயி 'குஷி'

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 09:12 am
2-wife-wins-local-body-election

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பியுள்ளார் விவசாயி ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாயியின் இரு மனைவியரும் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றனர். ‘வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வழுவூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் (49) விவசாயி. இவருக்கு செல்வி (46) காஞ்சனா (37) என இரு மனைவியர் உள்ளனர்.

செல்வி ஏற்கனவே வழுவூர் அகரம் பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். தற்போது அதே பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். தனசேகரின் மற்றொரு மனைவியான காஞ்சனாவின் சொந்த ஊர் கோவில்குப்பம் சாத்தனுார். அவருக்கு இதே கிராமத்திலேயே ஓட்டு இருந்தது. கோவில்குப்பம் சாத்தனுார் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு காஞ்சனா போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கையில் தனசேகரனின் இரு மனைவியரும் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராகி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close