போலீஸ் எனக்கூறி வீட்டில் புகுந்து துப்பாக்கி முனையில் 170 சவரன் நகை, பணம் கொள்ளை..!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 09:30 am
robbery-at-the-contractor-s-home-with-a-gun

மதுரை கூடல்புதூரில் பகுதியில் ஒப்பந்ததாரரான குணசேகரன் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு சென்ற சிலர் தங்களை போலீஸ் என கூறிக்கொண்டு உள்ளே சென்றனர். பின்னர்  திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை எடுத்து வீட்டில் இருந்தவர்களை மிரட்டினர். 

துப்பாக்கி முனையில் 170 சவரன் நகைகள், 2.8 லட்சம் ரொக்கம் மற்றும்  ரூ.20 லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை அக்கும்பல் எடுத்துச் சென்றது. இதனால்  குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இதனிடையே குணசேகரன் அளித்த புகார் அடிப்படையில் வீட்டில் புகுந்து துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close