சேலம் மாவட்டத்தை அதிமுக கோட்டையாக்கினார் முதல்வர்..!

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 10:11 am
admk-most-win-salem

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சிக்கான தேர்தல், ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கான தேர்தலில் அதிமுக பெருவாரியான வெற்றி பெற்று, முதல்வரின் மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என்று கூறும் அளவுக்கு பெயர் பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கான தேர்தல் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றியே மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. 
 
இதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 288 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 131 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. அதன் கூட்டணிக் கட்சிகள் 45 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமாக அதிமுக கூட்டணி 176 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணியில் திமுக 76 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, 20 ஊராட்சி ஒன்றியங்களில், 16 ஒன்றியங்களில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றுகிறது. 4 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறியே நீடிக்கிறது.

முதல்வரின் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 10 வார்டுகளையும் அதிமுக கைப்பற்றியது. மேலும், எடப்பாடி ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில், அதிமுக 12 வார்டுகளிலும், 1 வார்டில் திமுகவும் வெற்றி பெற்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close