மகள் கண்முன்னே மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த நபர்.. போதையில் வெறிச்செயல்

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:21 pm
the-husband-who-murdered-his-wife

சென்னை கொளத்தூர் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் தனசேகர் (43). இவரது மனைவி அம்சா (38). இவர்களுக்கு இந்துஜா (13) என்ற மகள் உள்ளார். மது போதைக்கு அடிமையான தனசேகர், கடந்த நான்கு மாதங்களாக திருவான்மியூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை முடிந்து சமீபத்தில்தான் வீடு திரும்பினார். சில நாட்கள் மது அருந்தாமல் இருந்த தனசேகர், கடந்த ஒரு வாரமாக மீண்டும் மது அருந்த தொடங்கினார். இதனால் தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், இரவில் அம்சாவின் அலறல் சத்தம் கேட்டு மகள் இந்துஜா எழுந்து பார்த்தபோது, தந்தை தனசேகர் அம்சாவின் மேல் உட்கார்ந்து கொண்டு அம்சா கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தார்.

அதிர்ச்சியடைந்த இந்துஜா உடனடியாக தனது தாயை காப்பாற்ற முயன்றபோது, அவளையும் கழுத்தை நெரித்து கொல்ல தனசேகர் முயற்சித்துள்ளார். உடனே அவரிடம் இருந்து தப்பித்த இந்துஜா, அங்கிருந்த செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவந்து அதே பகுதியில் உள்ள தனது பாட்டி விஜயலட்சுமிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே, பாட்டி விஜயலட்சுமி மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, அம்சா மயக்க நிலையில் கிடந்தார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த கொளத்தூர் போலீசார், அம்சாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து கணவர் தனசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close