சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்.. விசாரணையில் திடுக்கிடும் பின்னணி

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 12:34 pm
youth-raped-and-murdered-aschool-girl


திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியைச் சேர்ந்தவர் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கவிப்ரியா(16). இவரும் இனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மதிக்குமார்(22) என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கவிப்ரியா அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்துள்ளது. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனிடையே திருச்சி அருகே இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் இளம்பெண் ஒருவர் கை,கால் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அது கவிப்ரியா என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் கவிப்ரியாவின் காதலர் மதிக்குமாரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மாணவிக்கு வேறொரு இளைஞருடன் பழக்கம் இருந்ததாகவும் இதனை கைவிட கூறினால் அதை கேட்கவில்லை எனவும் கூறினார். சம்பவத்தன்று காட்டுப்பகுதிக்கு பேசவேண்டும் என அழைத்து சென்ற போது அது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மதிக்குமார், கவிப்ரியாவை தாக்கி கொடூரமாக கற்பழித்துள்ளார். பின் அருகே இருந்த கல்லை எடுத்து மாணவியின் தலையில் போட்டு கொலை செய்திருக்கிறார். 

கவிப்ரியா உயிரிழந்ததும் அவரது துப்பட்டாவை எடுத்து முகத்தை சுற்றி கட்டிவிட்டு அங்கிருந்து மதிக்குமார் தப்பிச் சென்றுள்ளார். கொலைவழக்கு பதிவு செய்த காவலர்கள், மதிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொலையில் அவரது நண்பர்கள் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close