அதிக பாரத்துடன் வேகமாக சென்ற லாரி விபத்து - 2 பெண்கள் உயிரிழப்பு

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 07:07 am
lorry-bike-accident-2-women-killed

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே இருச்சக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவிநாசியை அடுத்த ஆதாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவமணி(48), கனகமணி (40). இவர்கள் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கருவலூரில் உள்ள தங்களது பனியன் நிறுவன உரிமையாளரின் வீட்டிற்கு இருச்சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி அவர்களின் இருச்சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், லாரியில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close