குடித்துவிட்டு மனைவியை பாடாய் படுத்திய கணவர்.. பொறுக்க முடியாமல் அறுப்பு

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 08:02 am
clash-between-son-in-law-and-father-in-law-injured-with-blade

சென்னை அயனாவரம் பகுதியில் காந்திராஜன் - சந்தியா  தம்பதியர் வசித்து வந்தனர். இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் ஆவர். காந்திராஜன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த வாரம் கோபித்துக் கொண்டு பக்கத்து தெருவில் உள்ள  தாய் வீட்டிற்கு சந்தியா சென்று விட்டார்.

எனினும் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என சமாதானம் கூறி அவரது பெற்றோர் காந்திராஜன் வீட்டிற்கு மகளை அழைத்து வந்துள்ளனர் .  அப்போது போதையில் இருந்த பிரபாகரனுக்கும் மருமகன் காந்திராஜனுக்கும்  இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு சிறிது நேரத்தில் கைகலப்பு உருவானது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் மருமகன் காந்திராஜனை சரமாரியாக அறுத்துத் தள்ளினார்,  இதில் கழுத்து முகம் என பலிடங்களில்  அறுபட்டு படுகாயமடைந்தார் காந்திராஜன் , ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் .  இச்சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் பிரபாகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  மாமனார் மருமகனை பிளேடால் அறுத்துதள்ளியுள்ள  இந்த  சம்பவம்  மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close