கொலையில் முடிந்த தெருக் குழாய் சண்டை!

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 10:30 am
couple-who-killed-the-driver

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் சாமிதுரை. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கும் குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக தகராறு உள்ளது. இந்நிலையில், சாமிதுரைக்கும், சண்முகத்தின் மனைவி ராஜேஸ்வரிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஸ்வரியும், சண்முகமும் சாமிதுரையை கத்தியால் குத்தினர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், படுகாயம் அடைந்த சாமிதுரையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சண்முகம் தம்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close