சாராய பாட்டில் எங்கே.. சந்தேகத்தில் நடந்த மோதலில் ஒருவர்  கொலை

  முத்து   | Last Modified : 05 Jan, 2020 12:05 pm
in-a-fight-over-a-bottle-of-alcohol-he-killed-his-colleague-and-collided

கோயம்புத்தூர் அருகே கிணத்துக்கடவு பகுதியிலில் சக்தி சண்முகம் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். எனினும் தேர்தலில் பணி செய்த சிலருக்கு அவர் பார்ட்டி வைத்தார். அதன்படி, பண்ணை தொழிலாளர்கள் சக்திவேல் மற்றும் பெருமாள்சாமி ஆகியோரோடு சரக்கு பார்ட்டி வைத்தார்.

அப்போது திடீரென ஒரு பாட்டில் காணாமல்போனதால் அங்கிருந்து வெளியேபோன சக்திவேலை சந்தேகப்பட்டனர். உடனே பெருமாள்சாமி சக்திவேலின் வீட்டுக்கு சென்று சாராய பாட்டிலை ஏன் திருடிக்கொண்டு போனாய் ,பாட்டிலை கொடு என குடி போதையில் தகாத வார்த்தைகொண்டு திட்டினார்.

உடனே குடிபோதையில் இருந்த சக்திவேலுக்கு கோபம் வந்து அவரை அடித்தார் .அடுத்து பெருமாள்சாமி அருகிலிருந்த இரும்பு தடியால் சக்திவேலை தாக்கியதில் சக்திவேல் மண்டை உடைந்து அங்கேயே பலியானார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சக்திவேல் உடலை மீட்டு பெருமாள் சாமியை கைது செய்தனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close