சொத்துக்காக தாயை அடித்துக்கொன்ற பாசக்கார மகன்.. 5 பிள்ளைகளை பெற்று என்ன பயன்?

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 09:38 am
son-arrested-for-murdering-mother

மதுரை கீரைத்துறை வாழைத்தோப்பு பகுதியை சேர்ந்த மூதாட்டி பூச்சியம்மாளுக்கு இரண்டு மகன்கள், மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டதால், பூச்சியம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு முதுகுளத்தூரில் சொந்தமாக உள்ள நிலத்தை அவருடைய மூத்த மகன் பாண்டி, தாய் பூச்சியம்மாளுக்கு தெரியாமல் விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, தனது மூத்த மகன் பாண்டி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, மதுபோதையில் தாயிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது உருட்டு கட்டையால் தாக்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக பெற்ற தாயை அவரது மகனே கொலை செய்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close