நண்பனின் தாயுடன் கள்ளத்தொடர்பு! தீர்த்துக்கட்டிய மகன்!

  முத்து   | Last Modified : 06 Jan, 2020 07:11 pm
man-was-murdered-by-a-gang

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(45). கட்டிட தொழிலாளியாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் தற்போது சொந்த வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். கடந்த வாரம் இரவு, தனது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது, குளக்கரை அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் அலெக்சாண்டரை கொலை செய்த கும்பலைச் சேர்ந்த சுனில்(23) என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், அலெக்ஸாண்டருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது.

அப்பெண்ணின் மகன் ஜவகரும் சுனிலும் நண்பர்கள். இதனால் தாயுடன் உள்ள கள்ளத் தொடர்பை நிறுத்த வேண்டும் என இருவரும் அலெக்சாண்டரை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனாலும் அப்பெண் உடனான கள்ள உறவை அலெக்சாண்டர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜவகர், சுனிலுடன் சேர்ந்து அலெக்சாண்டரை கொலை செய்ய முடிவெடுத்தார். அதன்படி சம்பவத்தன்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அலெக்சாண்டர் மீது மிளகாய் பொடி தூவி வெட்டி செய்தது விசாரணையில தெரியவந்தது. இதனையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close