• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

13-2-2018 இன்றைய தெறிப்புச் செய்திகள்!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 13 Feb, 2018 07:25 pm

13-2-2018 இன்றைய பிரேக்கிங் செய்திகளின் தொகுப்பு:

7.08 PM: ஜெ.தீபா வீட்டுக்கு போலி வருமான வரி அதிகாரி வந்ததற்கும், தீபாவின் கணவர் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று சென்னை போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். பிரபாகரன்தான் போலியாக ஐ.டி கார்டு, வாரண்ட் உள்ளிட்டவற்றை தயாரித்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

7 PM: மதிப்பு இழந்த ரூபாய் நோட்டுகளை இன்னும் எண்ணி முடிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டு நவம்பரில் 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

6.30 PM: தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (15ம் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் விவகாரம், பஸ் கட்டணம், மின்சார கட்டணம், பட்ஜெட் கூட்டத்தொடர் என பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

4.30 PM: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஜான் ஜேக்கப் இன்று அகால மரணமடைந்தார். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

4.25 PM: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை தேர்வு செய்வதில், தமிழக அரசு தாமதம் செய்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

4.20 PM: இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

4.00 PM : சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு குறித்து கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகப் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

3.30 PM: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரான விவேக்கிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்முடிவில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது விவேக் அவரை சந்திக்கவில்லை என தகவலை மட்டும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

3.00 PM: கோவை விமான நிலையத்தில் வைத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில், தங்கத்தமிழ்செல்வனை அமைச்சராக்கலாம் என்று நினைத்தோம், ஆனால் அவர் தினகரன் பின்னால் சென்று விட்டார் என கூறினார்.

1.15 PM: பான், கேஸ், மொபைலைத் தொடர்ந்து ஓட்டுநர் உரிமத்துடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

12.55 PM: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டுவருகிறார். நேற்று தமிழிசை சவுந்திரராஜன் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

12.45 PM: நடிகர் கமல் தன்னுடைய கட்சிப் பெயரை நாளை மறுதினம் (15ம் தேதி) பதிவு செய்ய இருக்கிறார். இதையொட்டி தேர்தல் ஆணையத்தில் நேரம் ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.

12.40 PM: எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் வருகிற 15ம் தேதி முதல் தங்கள் ஹால்டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12.30 PM: அ.தி.மு.க உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுபவர்களுக்குத்தான் இனி அரசு வேலை கிடைக்கும் என்று தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். சில தினங்களுக்கு முன்பு செல்லூர் ராஜூ இதேபோல் பேசியிருந்தார். செங்கோட்டையனின் பேச்சை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். அ.தி.மு.க தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அப்படி அவர் பேசியிருப்பார் என்று புது விளக்கம் அளித்துள்ளார்.

12.20 PM: கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

12.15 PM: பிரதமர் மோடியின் புதுச்சேரி பயணத்தில் மாற்றம். பிரதமர் மோடி ஆரோவில்லுக்கு வருகிற 28ம் தேதி வருவதாக இருந்தது. அதற்கு பதில், 24ம் தேதியே அவர் வர உள்ளதாக, புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

12.05 PM: கட்டணத்தை உயர்த்தாமல் போக்குவரத்து கழகங்களை நிர்வாகம் செய்வது எப்படி என்ற தி.மு.க-வின் ஆய்வு அறிக்கை புத்தகத்தை தலைமை செயலகத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார் ஸ்டாலின். போக்குவரத்து கழகத்தை சீரமைக்க 27 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் பேட்டி.

12 PM: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை கண்டித்து போராடியவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால், தூத்துக்குடியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

11.50 AM: பஸ் கட்டண உயர்வு தொடர்பாக தி.மு.க செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருக்கிறார். இதற்காக, ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்துக்கு வந்தார். 12 மணிக்கு சந்திக்க இருப்பதால், தன்னுடைய அறையில் காத்திருக்கிறார்.

11.30 AM: கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், பாரதிராஜா மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாரதிராஜா மீதான வழக்கில், உண்மையிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு.

10.30AM: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷனில் ஆஜராக ஜெயா டி.வி சி.இ.ஓ வி விவேக் ஜெயராமன் இன்று வந்தார்.

Advertisement:
[X] Close