பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடையாது

  சாரா   | Last Modified : 31 Dec, 2019 05:29 pm

புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில புத்தாண்டு கொண்டாடட்டம் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் 2020-ம் ஆண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்துமீறிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக போக்குவரத்து காவல் துறை புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

சென்னையில் ஈ.சி.ஆர், மெரினா சாலை, பெசன்ட் நகர் சாலை போன்ற இடங்களில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுவர். குறிப்பாக புத்தாண்டின் போது இந்த சாலைகளில் இளைஞர்கள் அதிக அளவில் பைக் ரேஸிங் செய்வர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு ஆண்டு தோறும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாது சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளும் இதனால் பாதிக்கப்டுகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு தினத்தன்று பைக் ரேஸ் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு பாஸ்போர்ட் பெற தடையில்லா சான்று அளிக்கப்பட மாட்டாது. மேலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

காமராஜர் சாலையில் இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படும். இதேபோல் பிரெசிடென்சி கல்லூரி, ராணி மேரி கல்லூரி, விவேகானந்தா சாலை உள்ளிட்ட மெரினாவை சுற்றிய 8 இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்படும். அண்ணா மேம்பாலம் மற்றும் கத்திப்பாரா மேம்பாலம் தவிர்த்து மற்ற மேம்பாலங்களில் இரவு 11 மணி முதல் 1 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படும். சென்னை முழுவதும் 176 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து கண்காணிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close