• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

நான் அவ்ளோ பெரிய ரவுடிலாம் இல்ல.. போலீசிடம் கெஞ்சும் ரவுடி பினு

  முத்துமாரி   | Last Modified : 13 Feb, 2018 02:56 pm


இன்று போலீசிடம் சரணடைந்த சென்னை ரவுடி பினு கண்ணீர் மல்க போலீசிடம் கெஞ்சியுள்ளார். 

கடந்த வாரம் சென்னை புறநகர் பகுதியில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் இணைந்து 'பினு' என்ற ரவுடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு அதிரடியாக தாக்குதல் நடத்தி  சுமார் 75 ரவுடிகளை கைது செய்தனர்.

ஆனால், பினு உள்பட முக்கிய ரவுடிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், தப்பியவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அவரை சுட்டுப்பிடிக்க உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று காலை வேறு வழியில்லாமல் காவல்துறை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் அம்பத்தூர் காவல் நிலையத்தில் பினு சரணடைந்தார்.

சரணடைந்த அவரை அம்பத்தூர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் பினு கூறியதாவது, "நான் ரவுடிகளுடன் இணைந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளேன். சிறிதுகாலம் தலைமறைவாக இருக்கலாம் என்று கூறி கரூர் பகுதிக்கு சென்றேன். நான் கரூர் பகுதியில் இருந்தது எனது தம்பிக்கு மட்டுமே தெரியும். என் தம்பி என்னை பார்க்க வேண்டுமென்று சென்னை வர வேண்டும் என கூறினான்.

அதன்படி நான் சென்னை வந்தேன். இங்கு வந்து பார்த்ததும் தான் எனக்கு தெரிந்தது நான் வருகிறேன் என்று கூறி அனைவரையும் வரவழைத்துள்ளான். என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டுமென்று கையில் கத்தியை கொடுத்து கேக் வெட்ட சொன்னார்கள். நிர்பந்தத்தின் பேரில் நான் கேக் வெட்டினேன். நீங்கள் நினைப்பது போல நான் அவ்வளவு பெரிய ரவுடி எல்லாம் இல்லை. என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். இனிமேல் நான் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட மாட்டேன்" என கெஞ்சினார்.

Advertisement:
[X] Close