• முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
  • குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் - தமிழக அரசு

காதலென்பது... - படித்து ரசிக்க 15 பதிவுகள்!

  SRK   | Last Modified : 14 Feb, 2018 10:13 am


காதல் என்பது என்ன? - இந்தக் கேள்விக்கான தேடலில் சுவையான பதில்களைத் தந்தது சமீபத்திய ஃபேஸ்புக் ட்ரெண்டிங் #காதல்ங்கறது. கவித்துவமும் கலாய்ப்பும் மிகுந்த பதிவுகளில் இருந்து இதோ 15 பதிவுகள்....


Chelli Sreenivasan @ ஃபேஸ்புக்: 

#காதல்ங்கறது கார் மாதிரி

சிலருக்கு Gift ஆக கிடைப்பது

சிலருக்கு Lift ஆக கிடைப்பது! 

#தட்சால்

***

யாத்திரி @ ஃபேஸ்புக்: 

பல்லாண்டு காலமாக 

ஒருத்தியைத்தான் விரும்புகிறேன் என்றால் ஏளனமாகப் பார்க்கிறாய்

ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களுக்கு விளக்கமாக 

தன் விருப்பம் போல வாழ்தல் என்கிறாய்.

கேள்

ஒருத்தியையே நினைத்துக்கொண்டிருப்பதும் 

தன் விருப்பத்தின் பேரில் வாழ்தலே!

காதல் ஒன்றுதான்

எல்லோருக்கும் ஒன்றுபோலல்ல

#காதல்ங்கறது

****

Dhi Ya @ ஃபேஸ்புக்: 

#காதல்ங்கறது 

நான் நானாய்

நீ நீயாய்

நமக்காய் இருத்தல்!!

***

தனபால் பவானி @ ஃபேஸ்புக்:

#காதல்ங்கறது

குடை மறந்த நாளொன்றில்

பெருமழையாய்ப் பொழிவது

***

Rimzan Amanullah @ ஃபேஸ்புக்

#காதல்ங்கறது 

ஜனவரியில் துவங்கி 

பெப்ரவரியில் வளர்ந்து 

மார்ச்சுவரியில் முடிவது.

***

Vengat Jayaram Thiruvarur @ ஃபேஸ்புக்

#காதல்ங்கறது இன்ஜினியரிங் மாதிரி. படிக்கிறப்ப பெருமையாதான் இருக்கும். ஆனா படிச்சு முடிச்சப்றம் பக்கோடா தான் போடனும்.

***

Rajasangeethan John @ஃபேஸ்புக் 

#காதல்ங்கறது ஒரு வெங்காயம். உரிச்சு பார்த்தா ஒண்ணும் இருக்காது. கண்ணு மட்டும் கலங்கி இருக்கும்!

***

Shan Karuppusamy @ ஃபேஸ்புக்:

காதல்ங்கறது சில பேருக்கு ஆண்டிராய்டு போன் மாதிரி. ஒரு கம்பெனி இல்லன்னா இன்னொரு கம்பெனி. ஆனா சில பேருக்கு அது ஆப்பிள் போன் மாதிரி. கடைசி வரைக்கும் ஒரே கம்பெனிதான்.

****

விஷ்வா விஸ்வநாத் @ ஃபேஸ்புக்:

#காதல்ங்கறது உண்ணாவிரதமும் சாப்பாடும் மாதிரி. ரொம்ப நேரம் பிரிஞ்சு வாழவே முடியாதது. ;)

***

P Kathir Velu @ ஃபேஸ்புக்:

காதல்ங்கறது ஆன்மீக அரசியல் மாதிரி. நல்லது மாதிரி தெரியும். ஆனா, கடைசி வரை புரியவே புரியாததா இருக்கும் ;)

#காதல்ங்கறது

**

Latha Arunachalam @ ஃபேஸ்புக்:

உன் இருத்தலை உணர்த்த

இவ்வளவு இல்லாதிருத்தல் தேவையா?

#காதல்ங்கறது

***

Baskar M @ ஃபேஸ்புக்:

#காதல்ங்கறது...

நிர்க்கதியை நற்கதியாக்கும் 

நற்கதியை நிர்க்கதியாக்கும்

****

வியன் பிரதீப் @ ட்விட்டர்:

#காதல்ங்கறது புதிய இந்தியா மாதிரி, எப்போ வேனா பிறக்கும்!

***

Abdul Haseep @ ஃபேஸ்புக்: 


#காதலங்கறது படிக்க அனுப்புனா இவ பின்னாடி அலையுற இவன் ஒரு உதவாக்கரை; அவனையும் நம்பி வந்த இதுவும் ஒரு உதவாக்கரை... இந்த ரெண்டு உதவாக்கரையும் சேர்ந்து உருப்புடாமதான் போகப் போகுது!

***

Sabari Manickam @ ஃபேஸ்புக்: 


#காதல்ங்கறது இந்த மாதிரி கைக்கு எட்டுற தொலைவுலதான் இருக்கும்; ஆனா கண்டுபிடிக்க முடியாது!

***

Advertisement:
[X] Close