பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: மதுரைக் கிளை உத்தரவு

  முத்துமாரி   | Last Modified : 22 Feb, 2018 04:08 pm


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வின் மதிப்பீட்டின் போது, குளறுபடி நடந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சிவகங்கையை சேர்ந்த இளமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில், "பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 200 பேர் முறைக்கேட்டில் ஈடுபட்டதற்காக தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த தேர்வாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. தவறு செய்தவர்களை மட்டும் நீக்கி விட்டு பணி நியமனம் செய்யப்பட வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 


இவ்வழக்கின் இன்றைய விசாரணையில் நீதிபதிகள் கூறுகையில், "200 பேரின் தேர்வுத்தாளில் குளறுபடி நடந்ததற்காக ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது முறையாகாது. எனவே தமிழக அரசு தேர்வை ரத்து செய்தது செல்லாது. குளறுபடி நடந்த 200 தேர்வர்களை மட்டும் நீக்கிவிட்டு மற்றவர்களின் மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்து பணி நியமனத்தை தொடரலாம். 'தேர்வில் எந்த குளறுபடியும் நடக்கவில்லை, மதிப்பீட்டிற்காக தனியார் ஏஜென்சி சென்றது தான் குளறுபடிக்கு காரணம்' என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்மனு தாக்கல் செய்துள்ளதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தேர்வை ரத்து செய்வதை விட்டு விட்டு தமிழக அரசு வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி பணி நியமன ஆணை வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close