மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

  முத்துமாரி   | Last Modified : 22 Feb, 2018 04:22 pm


தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்கழகத் தலைவர் சாய்குமார் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

தமிழகத்தில் மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை ஆகியவற்றை விரைந்து வழங்கும்படி கோரிக்கை விடுத்தது வந்தனர். கடந்த பிப்ரவரி 12ம் தேதிக்குள் மின்வாரியத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தொழிலாளர் நல வாரியத்தின் ஆணையர் தெரிவித்திருந்தார்.

ஆனால்  கூறியபடி அரசு தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்காததால், கடந்த 16ம் தேதி மின்வாரியத் தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. அரசு தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாக ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் இன்று அமைச்சர் தங்கமணி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close