’நான் நாம் ஆனோம்’- தமிழிசை குற்றச்சாட்டும்... மய்யம் மறுப்பும்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Mar, 2018 06:31 pm


கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இணைந்ததற்கான இ-மெயில் தனக்கு வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதற்கு மக்கள் நீதி மய்யம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழிசை: ’நான் நாம் ஆனோம்’, இன்றிலிருந்து நீங்கள் எங்கள் கட்சியில் உறுப்பினர் ஆனீர்கள். உங்களது உறுப்பினர் எண்-இது தான்! என மக்கள் நீதி மய்யத்தில் இருந்து எனக்கும் இ- மெயில் வந்தது.

மக்கள் நீதி மய்யம்: இணையத்தில் பதிவு செய்பவர்களுக்கு அனுப்பபடும் மின்னஞ்சல்தான் அது. மொபைல் எண்ணுடன் பதிவு செய்தால் மட்டுமே அந்த மெயில் வரும். அந்தவகையிலேயே தமிழிசைக்கும் அனுப்பப்பட்டிருக்கும்.

தமிழிசை: பாஜக மாநில தலைவரையே உறுப்பினராக்கும் மோசடி வேலையை மக்கள் நீதி மய்யத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம்: நாங்களாகவே சென்று யாரையும் கட்சியில் சேரும்படி வற்புறுத்தியது கிடையாது. 


தமிழிசை: கமல்ஹாசன் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க கிடைக்கும் இ-மெயில் முகவரிக்கு எல்லாம் அழைப்பு அனுப்புகிறார் கமல்.

மக்கள் நீதி மய்யம்: மக்கள் நீதி மய்யத்தில் சேர யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 

தமிழிசை: என்கிட்ட ஆதாரம் இருக்கு. வந்த இமெயில் என் ஐபேடி இருக்கு நான் காட்டுகிறேன்.

மக்கள் நீதி மய்யம்: இதுவரை ரிஜிஸ்டர் செய்தவர்களுக்கும் மெசெஜ் மட்டுமே அனுப்பியுள்ளோம். யாருக்கும் மெயில் அனுப்பப்படவில்லை. 

தமிழிசை: அப்பட்டமான பொய்யான கட்சியை நடத்தி வருகிறார் கமல். 

மக்கள் நீதி மய்யம்: தாங்களாகவே ரிஜிஸ்டர் செய்யாமால் எந்த மெயில் மற்றும் மெசெஜ் எங்களிடமிருந்து வராது.

தமிழிசையின் மின்னஞ்சல் சோஷியல்மீடியாவில் கிடைக்கிறது. இதை வைத்து யாரோ விஷமி அவரை கமல் கட்சியில் சேர்த்திருக்கிறார். இதை கமலே செய்தது போல தமிழிசை பேட்டி கொடுத்திருப்பதை என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை என்று புலம்பியபடி சென்றனர் நிருபர்கள்.

உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ?

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close