• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

பேராசிரியை விவகாரத்தில் 15 நாட்களுக்குள் அறிக்கை: துணை வேந்தர்

  Newstm Desk   | Last Modified : 16 Apr, 2018 04:28 pm


பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் 15 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தொலைபேசியின் வாயிலாக மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்திச் செல்வதாக ஒரு ஆடியோ வெளியானது. மாணவர்களை வழிநடத்த வேண்டிய ஆசிரியரே இதுபோன்று தவறானசெயலில் ஈடுபட்டுள்ளதால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 

இதுகுறித்து  மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் செல்லத்துரை தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "மாணவர்களின் இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் எங்களது கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

பேராசிரியை நிர்மலா தேவி குறித்து இதுவரை மாணவர்களிடம் இருந்தும், கல்லூரியில் இருந்தும் எந்த ஒரு புகாரும் வரவில்லை. பத்திரிக்கைகள், ஊடங்கங்கள் வாயிலாகவே நாங்கள் இதை அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில மணி நேரங்களுக்கு முன்பே கல்லூரி தரப்பில் இருந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறதோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்னும் 15 நாட்களுக்குள்ளாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதுகுறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை அடிப்படையில் பேராசிரியை நிர்மலா தேவி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close