• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

பெண் பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் எஸ்.வி.சேகர்

  Newstm Desk   | Last Modified : 20 Apr, 2018 02:54 pm


பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் அதற்கு மன்னிப்பு கேட்டு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.   

கடந்த இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஆளுநர் பன்வரிலால் புரோகித், பெண் பத்திரிகையாளர் ஒருவரது கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பெண் நிருபர் வருத்தம் தெரிவிக்க, ஆளுநர் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, நடிகர் எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகையாளரை மிக இழிவாக விமர்சித்து ஒரு பதிவை ஷேர் செய்திருந்தார். இதற்கு கண்டனம் எழுந்ததையடுத்து உடனடியாக அதை நீக்கி விட்டார்.

அவர் பதிவை நீக்கிய பிறகும்  தொடர்ந்து அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.  இதையடுத்து பெண் பத்திரிக்கையாளரிடம் மன்னிப்பு கோரி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "நேற்று முகநூலில் ஒரு நண்பர் எழுதிய கருத்தை படிக்காமல் நான் பதிவிட்டுத் விட்டேன். என் மற்றொரு நண்பர் அதை படித்துவிட்டு பெண்களை பற்றி இழிவாக எழுதி இருக்கிறது என கேட்டார். உடனே நான் அதை நீக்கி விட்டேன். அதில் உள்ள கருத்துக்கள் குறிப்பாக பெண்களை தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை. அனைத்துபெண்களையும் சகோதரிகளாக பார்க்கும் குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். தரம் குறைந்த தனிமனித விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த சம்பவத்தால் மன வருத்தம் ஏற்பட்டுள்ள எனது அனைத்து பத்திரிக்கை சகோதரிகளுக்கும் எனது மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close