• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

தமிழகத்தை விட்டு கிளம்பும் மூடுக்கு வந்த ஆளுநர்... சமரசத்தில் மத்திய அரசு!

  டேவிட்   | Last Modified : 20 Apr, 2018 02:48 pm


கடந்த சில நாட்களாகப் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தான் தமிழகத்தில் ஹாட் டாப்பிக். மாணவிகளைத் தன் வழிக்குக் கொண்டுவர நிர்மலாதேவி வீசிய வார்த்தைகள் ஆளுநர் வரை பலரையும் அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டது. 

பிரச்னை பெரிதாக ஆரம்பித்ததுமே தமிழக அரசை முந்திக்கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டார் ஆளுநர். இதுவே, இந்தப் பிரச்னையில் ஊடகங்களின் பார்வையைத் திருப்பியது. அதைத் தொடர்ந்து அவசர அவசரமாகப் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத் துணை வேந்தரை அருகில் வைத்துக்கொண்டே பேட்டி அளித்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. போதாக்குறைக்குப் பிரஸ் மீட்டில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்த விஷயமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதிரடிகளைச் செய்துவந்தபோது, அதுபோன்ற ஆளுநர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கமாட்டாரா என்று மக்கள் ஏங்கினர். தமிழகத்துக்குப் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவால் பெரிய அளவில் தமிழக விவகாரங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடின. அதன்பேரில் பன்வாரிலால் ப்ரோகித்தை தமிழக ஆளுநராக நியமித்தது மத்திய அரசு. 

மற்ற ஆளுநர்கள் போல் பட்டமளிப்பு விழா, இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கடை திறப்பு விழா போன்றவற்றுக்குப் போனோமோ வந்தோமோ என்றில்லாமல் அடிக்கடி ஆய்வுகளை நடத்தினார். அப்படி ஆளுநர் மாளிகையிலும் ஆய்வு நடத்த, அதனால் வந்த வினை தான் தற்போது ஆளுநரை ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்க வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பெண்கள் விஷயத்தை முன்னிறுத்தி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராடுவதும், பெண் பத்திரிகையாளரின் செயல்பாடுகளும் ஆளுநரை மிகவும் மன வருத்தம் அடைய செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ராஜினாமா செய்யும் மூடில் ஆளுநர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள் இல்லையேல் ராஜினாமா செய்கிறேன் என்று பன்வாரிலால் கூறியுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தனக்கு எதிராக யார் எல்லாம் செயல்பட்டார்கள் என்று புகார் பட்டியலை பா.ஜ.க தலைமைக்கும் தெரிவித்திருக்கிறாராம் ஆளுநர். இதனால். பன்வாரிலாலை அமைதிப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாம். அவர் சமரசத்தை ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து தமிழக ஆளுநராக நீடிப்பார்... இல்லை என்றால், அவரது சுய விருப்பத்தின் பேரில் அவர் வேறு மாநிலத்துக்கு மாற்றக்கூடும் என டெல்லி தரப்பில் தகவல் கசிந்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close