ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை: கார் ஓட்டுநர் அய்யப்பன்

  முத்துமாரி   | Last Modified : 08 Mar, 2018 02:01 pm


அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்படவில்லை என அவரின் கார் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இன்று ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பன் நீதிபதி முன்பாக ஆஜரானார். 

அவர் அளித்த தகவலின் படி, "அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக கூறப்படுவது தவறானது. மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவை நான் பார்த்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு அவரது கால் கட்டை விரல்களை கட்டுவது உள்ளிட்ட இறுதிச்சடங்குகளை நான் தான் செய்தேன்" என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close