• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

நிர்மலா தேவியிடம் இன்று விசாரணை செய்கிறார் சந்தானம்

  Sujatha   | Last Modified : 26 Apr, 2018 08:00 am


கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த பேராசிரியர் நிர்மலாதேவி, தன்னை இந்த செயலுக்கு தூண்டியது காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என விசாரணையில் தெரிவித்ததாக கூறப்பட்டது.

இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், பேராசிரியர் முருகனை கைது செய்தனர். போலீசாரால் தேடப்பட்ட கருப்பசாமி, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார். அவரது நண்பர் தங்க பாண்டியனையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து கவர்னர் நியமித்த விசாரணை அதிகாரி சந்தானம், பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டார். இதன் அடிப்படையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம் இன்று விசாரணை நடத்த உள்ளதாக சந்தானம் தெரிவித்துள்ளார். 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close