பள்ளி வேலைநாட்கள் 170லிருந்து 185ஆக அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 20 May, 2018 02:02 pm

தமிழகத்தில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170லிருந்து  185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்கள் 170லிருந்த 185 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளது.

QR Code மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். 

மேலும், ''ஏற்கனவே அறிவித்தப்படி ஜூன் 1ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வருகிற 23ந் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும்''  எனவும் கூறினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close