உடல்கள் பதப்படுத்துதல் - தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 24 May, 2018 02:44 pm


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களை பதப்படுத்துவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்பட்டமனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதைக்கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என அவர்களது உறவினர்கள் கோஷமிட்டனர். பின்னர் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கில்,  "உடற்கூறு செய்தாலும் செய்யாவிட்டாலும் சரி உடல்கள் அனைத்தையும் பதப்படுத்த வேண்டும். ஏற்கனவே சர்ச்சை நீடிக்கும் நிலையில், இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் தன்மையை பொறுத்து மறு ஆய்வு தேவையா இல்லையா என உத்தரவிடப்படும்" என்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. "உயிரிழந்தோரின் உடல்களை வாங்க உறவினர்கள் அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எனவே உடனடியாக உடற்கூறு செய்து உடல்களை ஒப்படைக்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது. 

இன்று பிற்பகல் நடந்த இந்த வழக்கின் விசாரணையில், இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மாற்ற முடியாது என நீதிபதிகள் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவரின் உடல்களை நீதிமன்ற உத்தரவின்படி பதப்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close