30,000 பேருக்கு வேலை போகும்: ஸ்டெர்லைட் நிர்வாகம் எச்சரிக்கை

  shriram   | Last Modified : 30 May, 2018 06:54 pm
30-000-workers-will-lose-jobs-if-sterlite-is-shutdown-sterlite-ceo

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால், 30,000 பேருக்கு வேலை பறிபோகும் என்றும் இந்தியாவின் இறக்குமதி 13,500 கோடி ரூபாய் அதிகரிக்கும் என்றும் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

22 ஆண்டுகளாக இயங்கி வந்த சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தது. சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டம் 100வது நாளை எட்டியதையொட்டி போராட்டம் கலவரமானது. அதை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசுக்கு எதிராகவும், காவல்துறையினருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றன. 

ஒரு வழியாக, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார். ஆலையை விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்காக வழங்கிய இடத்தை சிப்காட் ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, ஆலையை தொடர்ந்து இயக்க நீதிமன்றத்தை நாடுவதாக ஸ்டெர்லைட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைவர் ராம்நாத் பேசியபோது, "தமிழக அரசு திடீரென ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்துள்ளதால், தூத்துக்குடியின் பொருளாதாரம் மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படும். 30,000 பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும். அதேநேரம், ஸ்டெர்லைட்டின் பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவின் இறக்குமதி சுமார் ரூ.13,500 கோடி அதிகரிக்கும். மேலும், எங்கள் நிறுவனம் உருவாக்கும் பொருட்களை நம்பியுள்ள சிறிய வணிகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள்" என கூறினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close