அப்படியா பேசினேன்? - வருத்தம் தெரிவித்தார் ரஜினி

  Newstm Desk   | Last Modified : 31 May, 2018 08:00 pm
rajinikanth-feels-sorry-for-his-behaviour-towards-journalists

நடிகர் ரஜினிகாந்த், தூத்துக்குடி சென்று வந்த பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், நிருபர்களை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, வருத்தம் தெரிவித்துள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் அரசியலில் குதித்த நடிகர் ரஜினிகாந்த், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி சென்றார். ஏற்கனவே, போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததால் தான் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ரஜினி கூறியது எதிர்கட்சிகளிடையே விமர்சனத்தை எழுப்பியது. தூத்துக்குடி சென்றுவந்த பின் செய்தியாளர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, "சமூக விரோதிகளால் தான் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இப்படியே எதுக்கெடுத்தாலும் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தால், தமிழ்நாடே சுடுகாடாகும்" என ஆவேசமாக ரஜினி பேசினார்.

அவர் கோபத்தில் பத்திரிக்கையாளர்களை மரியாதை இல்லாமல் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, தான் பேசியதற்காக டிவிட்டரில் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். "விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில்,ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டுருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்" என ரஜினி எழுதினார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close