கச்சநத்தம் படுகொலைகள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அதிகரிப்பு

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 10:21 am
kachanatham-killings-tn-govt-increases-relief-to-family-members

கச்சநத்தம் பகுதியில் கோவில் திருவிழா தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை அதிகாரித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த திங்களன்று, கச்சநத்தம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் முதல் மரியாதை கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றொரு பிரிவினரை வீடு புகுந்து வெட்டியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி தலித் மக்கள் மருத்துவமனைக்கு வந்து இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவிடாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

குற்றவாளிகள் 5 பேர், சரணடைந்துள்ளனர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாயை நிவாரணமாக அரசு அறிவித்திருந்த நிலையில், அதை 15 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. படுகாயம் அடைந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயும், லேசான காயம் ஏற்பட்டவர்களுக்கு 1.5 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close