குரூப் 1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 12:16 pm

age-limit-is-increased-for-tnpsc-group-1-exam

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 பணிக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். 

டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 1 தேர்வு தமிழக அரசின் டி.எஸ்.பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இன்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, "எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35லிருந்து 37 ஆகவும், பிற பிரிவினருக்கு 30ல் இருந்து 32ஆகவும் உயர்த்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் முதல்வர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close