நீட் தேர்வு: தேசிய அளவில் தமிழக மாணவி 12ம் இடம்!

  Newstm Desk   | Last Modified : 04 Jun, 2018 03:48 pm

neet-exam-results-tn-student-keerthana-got-12th-rank

நீட் தேர்வு முடிவில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவி அகில இந்திய அளவில் 12ம் இடம் பெற்றுள்ளார். 

நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கடந்த மே 6ம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், 12.30 மணிக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்வினை நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதியிருந்த நிலையில் 7.14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.  நாடு முழுவதும் தேர்ச்சி பெற்றவர்களில் 720க்கு 691 மதிப்பெண் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 1.14 லட்சம் மாணவர்கள் எழுதினர். அதில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் மொழியில் 24,720 பேர் தேர்வு எழுதினர். அதில் 1.86% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கீர்த்தனா என்ற மாணவி 676 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 12ம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close