ஜல்லிக்கட்டு நாயகனா? காளைய அடக்க கூப்பிட்டப்போறாங்க... தமாஷ் செய்த ஓபிஎஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Jun, 2018 05:44 pm
dont-call-me-as-a-jallikattu-nayagan-said-ops

ஜல்லிக்கட்டு நாயகன் என என்னை அழைக்காதீர்கள், என பேரவையில் ஓ.பி.எஸ் பேசியது நகைச்சுவையை ஏற்படுத்தியது. 

ஸ்டெர்லைட்க்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போன்று கடந்த வருடம் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்த மாபெரும் போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டம்.  அப்போது தமிழக முதலமைச்சராக ஓ.பி.எஸ் பதவி வகித்தார். அப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டை அனுமதிக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்து அப்போதைய முதலமைச்சரான ஓபிஎஸ் அவசர சட்டத்தை அமல்படுத்தினார்.

இந்நிலையில் இன்று பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ், துணை முதல்வர் ஓபிஎஸ்-ஸை “ஜல்லிக்கட்டு நாயகனே” என புகழ்ந்து பேசினார். இதையடுத்து பேசிய ஓபிஎஸ், “என் பெயரை சொல்லி அழைக்கும்போது “ஜல்லிக்கட்டு நாயகன்” என அழைக்காதீர்கள்!. ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் வேடிக்கைப்பார்க்க சென்றால், ஜல்லிக்கட்டு நாயகனே காளையை அடக்குங்கள் என்று சொன்னால் என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என நகைச்சுவையாக பேசினார். 

மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும். பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை என கூறினார். நீட், ஜல்லிக்கட்டு விவகாரத்துக்குத்தான் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் எனக்கூறிய அவர், ஸ்டெர்லைட் பிரச்னையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

துணை முதல்வர் மிகவும் அடக்கமாக பதில் அளித்தாலும் அதையும் நெட்டிசன்கள் விட்டு வைக்கவில்லை. உங்ளை துணை முதலமைச்சர் என்று அழைக்கிறார்கள். முதலமைச்சராக, பழைய முதலமைச்சராக வாருங்கள் என்று யாராவத அழைத்தால் என்ன ஆவது. அதனால், துணை முதலமைச்சர் பதவி வேண்டாம், சாதாரண அமைச்சர் பதவி போதும் என்று சொல்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். என்ன கேள்வி எழுப்பி என்ன ஆகப்போகிறது...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close