2019 ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 12:04 pm
plastic-is-banned-in-tn-from-jan-1-2019-says-cm-edappadi-palanisamy

தமிழகத்தில் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். 

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி 'உலக சுற்றுசூழல் தினம்' கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுசூழல் மாசுபாட்டைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது தான் அனைத்து தரப்பினரின் முக்கிய கருத்தாக உள்ளது. அதன்படி இன்று நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக முதல்வர் அறிக்கை ஒன்றை வாசித்தார்.

அதன்படி, "தமிழகத்தில் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. விதி 110ன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், உபயோகிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மருந்து, பால் பொருட்கள் மற்றும் எண்ணெய் அடைக்க உபயோகிக்கப்படும் நெகிழி பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மட்காத பிளாஸ்டிக்கை மக்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். 

பிளாஸ்டிக் உபயோகத்தினால் சுற்றுசூழல் மிகவும் மாசடைந்துள்ளது. கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறப்பை சந்திக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்களால், மழை நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. கழிவு நீர் பாதைகளும், நிலத்தடி நீரும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் தாள், தட்டு, கைப்பை, உறிஞ்சிகள், தண்ணீர் பாக்கெட்டுகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் 2019 ஜனவரி 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் தடைக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் துணிப்பைகள், காகித பைகள் ஆகியவற்றை உபயோகிக்க மக்கள் முன்வர வேண்டும். இந்த நல்ல திட்டம், சிறப்பாக செயல்பட்டால் இயற்க்கை அன்னை காக்கப்படுவாள்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close