காலா பிரச்னை: கன்னடத்தில் உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்

  Newstm Desk   | Last Modified : 06 Jun, 2018 11:39 am
rajini-about-kaala-issue

கர்நாடகாவில் 'காலா'வை வீம்புக்கு வெளியிடவில்லை என்றும் கர்நாடக அமைப்புகள் தன்னை நேரில் வந்து பார்க்கலாம் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் காலா படம் திரையிடும்போது பாதுகாப்பு வழங்க வேண்டும் எ;னறு தயாரிப்பாளர் தனுஷ் நீதிமன்றத்தில் கேட்டிருந்தார். அதனை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் காலா படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இதனையடுத்து  இதுப்பற்றி கருத்து தெரிவித்த கர்நாடகா முதலமைச்சர் எச்.டி. குமாரசாமி, காலாவை கர்நாடகாவில் வெளியிடமால் இருப்பதே நல்லது. தொடர்ந்து வெளியிட்டால் அதன் விளைவுகளை பட தயாரிப்பாளர்கள் சந்திக்க நேரிடும் என்று கூறினார். 

இந்நிலையில் இன்று காலை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், காவிரி விவகாரம் தொடர்பான கருத்து தனது சொந்த கருத்து என்றும், அதற்காக காலாவை கர்நாடகாவில் வெளியிடமால் இருப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ளார். 

மேலும், "கர்நாடகா உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவின்படி, கர்நாடகாவில் ‘காலா’ படம் வெளிவரும் தி்ரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி போதிய பாதுகாப்பு வழங்குவார் என்று நம்புகிறேன். கர்நாடகாவில் காலா வெளிவரும் விவகாரம் குறித்து முதல்வர் குமாரசாமியின் சூழ்நிலை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. காலா வெளியீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தும் கன்னட அமைப்புகள் என்னை வந்து நேரடியாக சந்திக்கலாம். 

கர்நாடகாவில் காலா படத்தை வீம்புக்காக ரிலிஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் காலா வெளிவருகிறது. இதை அங்குள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். திரைப்பட வெளியீட்டில் பிரச்னை ஏற்படும் போது, அதை முன் நின்று சரிசெய்வது தான் திரைப்பட வர்த்தக சபையின் வேலை. ஆனால் காலா பட வெளியீட்டு எதிர்ப்பிற்கு கர்நாடாக வர்த்தக சபையும் உறுதுணையாக இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது" என்று கூறினார். 

இறுதியாக கன்னட மொழியில் பேசிய ரஜினிகாந்த், "நான் எந்த தவறும் செய்யவில்லை, கர்நாடகாவில் காலா படத்தை பார்க்க பலரும் ஆவலாக உள்ளனர். இந்த படத்தில் பலரது உழைப்பும் அடங்கியிருக்கிறது. அதற்கு மரியாதை அளித்து கர்நாடகா மக்கள் காலா வெளியீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close