• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

மூன்றாம் பாலினத்தவர், மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் 150% அதிகரிப்பு!!

  சுஜாதா   | Last Modified : 07 Jun, 2018 06:36 am

self-employment-subsidy-to-improve-third-party-livelihood-increased

மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.50,000 உயர்த்தப்படும் என்றும் சட்டப் படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் சட்டப் புத்தகங்கள் வாங்கவும் மற்றும் வக்கீல்கள் சங்கத்தில் பதிவு செய்யவும் வழங்கப்பட்டு வரும் நிதி உதவி, ரூ.3000, இருந்து ரூ.10000 ஆக உயர்த்தப்படும் என்றும்  டாக்டர் வி.சரோஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழக சட்டசபையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர். அவர்களுக்கு அமைச்சர் டாக்டர் வி.சரோஜா பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

தமிழகத்தில் 54,439  அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அவற்றில் 1,132 மையங்களுக்கு குடிநீர் வசதி வழங்கப்படும்.

சென்னை மாவட்டத்துக்கு கூடுதலாக இரண்டு புதிய குழந்தை நலக்குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

மூன்றாம் பாலினத்தவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வழங்கப்பட்டு வரும் மானியம் ரூ.20,000 இருந்து ரூ.50,000 உயர்த்தப்படும்.

உணவூட்டுச் செலவீனம்

சத்துணவில் முட்டை சாப்பிடாத பயனாளிகளுக்கு வழங்கப்படும் வாழைப்பழத்தின் விலை ரூ.1.25-ல் இருந்து ரூ.3.50 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 43,205  சத்துணவு மையங்களுக்கு சோப்பு, நகவெட்டி, துண்டு, கையுறைகள் போன்றவை உள்ளடக்கிய சுகாதாரப் போன்றவை உள்ளடக்கிய சுகாதார பேழைகள் வழங்கப்படும்.

அரசு சேவை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் உணவூட்டுச் செலவீனம் மாதம் ரூ.450-ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தப்படும்.

முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்களில் பயன்பெறும் முதியோருக்கு மாதாந்திர உணவூட்டுச் செலவீனம் ரூ.1,200 ஆகவும், குழந்தைகளுக்கான மாதாந்திர உணவூட்டுச் செலவீனம் ரூ.900 ஆகவும் உயர்த்தப்படும்.

நிதியுதவி உயர்வு

சட்டப் படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் சட்டப் புத்தகங்கள் வாங்கவும் மற்றும் வக்கீல்கள் சங்கத்தில் பதிவு செய்யவும் வழங்கப்பட்டு வரும் நிதி உதவி, ரூ.3000 இருந்து ரூ.10000 ஆக உயர்த்தப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம், 2016-ன்படி, அவர்களுக்கு அரசுப் பணிகளில் 4 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க ஏற்கனவே ஆணை வழங்கியுள்ளது. இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் விதமாக தொகுதி ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு, நேரடி நியமனங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைவில் ஆணை வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close