சனிக்கிழமை தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 07 Jun, 2018 09:33 am
tamil-nadu-cm-to-visit-thoothukudi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமை தூத்துக்குடி செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடியில் போராட்டங்கள் நடந்து வந்தன. இதன் 100வது நாள் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.இதற்கு உலகளவில் கடும் எதிர்ப்புகள் வந்தன. இதனையடுத்து இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தமிழக அரசு சார்பில் துணை முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தூத்துக்குடி சென்று மக்களை சந்தித்தனர்.

மேலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் சம்பவம் நடந்த இடத்திற்கு ஆட்சியருடன் சென்று ஆய்வு நடத்தினார். ஆனால் தமிழக முதல்வர் மட்டும் அங்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இதனையடுத்து தூத்துக்குடிக்கு துணை முதல்வர் சென்ற அன்றே மாலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணையை முதல்வர் வெளியிட்டார். அன்றைய தினமே அந்த ஆலைக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இதனையடுத்து இது நிரந்தரமான ஒன்று அல்ல என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டினர். 

அதன்பின் தமிழக சட்டபேரவை கூட்டத்தில் இதுகுறித்து பேசிய முதல்வர், இதுவரை ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியானதே தவிர எந்த அரசும் சீல் வைக்கவில்லை. தற்போது தான் அது நடந்துள்ளது. எனவே இனி யார் நினைத்தாலும் அதனை திறக்க முடியாது என்றார். 

மேலும் அந்த ஆலை நிர்வாகம கோர்டில் முறையிட்டாலும், தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால் கோர்ட் தங்களிடம் அது குறித்து கருத்துக்கேட்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேரவையில் எதிர்கட்சியின் கேள்விக்கு விளக்கம் அளித்தார். 

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தூத்துக்குடி செல்கிறார். நாளை மறுநான் அதாவது சனிக்கிழமையன்று அவர் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்று தெரிகிறது. 

முன்னதாக சம்பவம் நடந்த உடனே தூத்துக்குடிக்கு ஏன் செல்லவில்லை என்ற கேள்விக்கு, 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளதால் அங்கு செல்லவில்லை என்றும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close