பி.இ சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம்: மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?

  Newstm Desk   | Last Modified : 08 Jun, 2018 12:03 pm
engineering-counselling-certificate-verification-starts-today

பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்கியுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 42 மையங்கள் செயல்படுகின்றன. 

தமிழகத்தில் இந்தாண்டு பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. மொத்தமாக 509 கல்லூரிகளில் 1.78,131 இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 7ம் தேதி முதல் நடக்க இருக்கிறது. இதற்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியான நிலையில் இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கியுள்ளது. ஜூன் 14ம் தேதி வரை தமிழக அரசால் நியமிக்கப்பட்ட 42 மையங்களில் நடக்கிறது.  குறிப்பிட்ட நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர முடியாதவர்கள் ஜூன் 17ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு வரலாம். அதேபோன்று மாணவர்கள் வர முடியாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர் அல்லது உறவினரை அனுப்பலாம். ஆனால் அவர்கள் பெற்றோரிடம் அனுமதி கடிதம் ஒன்றை கொடுத்து அனுப்ப வேண்டும். 

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் நீங்கள் விண்ணப்பித்த படிவத்தை ஒரு நகல் எடுத்து அதில் உங்கள் புகைப்படத்தை ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச்செல்ல வேண்டும். இத்துடன் 10ம் வகுப்பு மற்றும் 12ம்  வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், 12ம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட், நிரந்தர ஜாதி சான்றிதழ் தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கான சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ், ராணுவ வீரர் வாரிசு என இதர சான்றிதழ்களையும் எடுத்துச்செல்ல வேண்டும். இந்த சான்றிதழ்களின் நகல்களையும் கண்டிப்பாக எடுத்துச்செல்ல வேண்டும். 

ஒரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் தங்களுக்கு வந்த குறுஞ்செய்தி தகவலின் படி, ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மையத்திற்கு சென்றுவிட வேண்டும். ஆன்லைனிலும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் ஆகிய விபரங்களை பார்க்க முடியும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து உடனடியாக மாணவர்களிடம் அசல் சான்றிதழ் ஒப்படைக்கப்படும். 

இந்த கலந்தாய்வுக்கு முன்னதாக கல்லூரிகளில் சேர்ந்தவர்கள் தங்களது கல்லூரியில் சான்றிதழ் இருப்பதற்கான அத்தாட்சி கடிதத்துடன் அட்டெஸ்டட் வைத்த சான்றிதழ்களின் நகல்களை எடுத்து வர வேண்டும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close