09-06-2018 - இன்றைய முக்கிய செய்திகள்

  Newstm News Desk   | Last Modified : 09 Jun, 2018 06:05 am

09-06-2018-breaking-news

ரஷ்யாவை ஜி7 நாடுகளோடு சேர்க்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலிய பிரதமர் கிசப்பே கான்டே ஆகியோர் செய்த பரிந்துரையை, ஐரோப்பிய கவுன்சில் நிராகரித்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை பணியிடமாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்ட்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு, மகாராஷ்ட்ர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர். மக்களுடன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காஸா எல்லையில் நேற்று நடைபெற்ற போராட்டங்களில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 4 பேர் கொல்லப்பட்டனர்; 618 பேர் காயமடைந்தனர். 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போராட்டங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 120க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பிரென்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில்,  ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம், மற்றும் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள ஸர்டானா என்ற ஊரில், ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில், இன்று 44 பேர் கொல்லப்பட்டனர். அதில் 6 பேர் குழந்தைகள் ஆவார்கள். 

கர்நாடக மாநிலத்தின் அமைச்சரவைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிப்பதில், காங்கிரஸ் கட்சியினரிடையே உட்கட்சி பூசல் நடந்து வருவதாக கூட்டணி கட்சித் தலைவரும் முதல்வருமான குமாரசாமி தெரிவித்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close