குரங்கணி தீ விபத்து அறிக்கை தயார்: விசாரணை அதிகாரி

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 03:47 pm
investigation-is-going-to-finish-for-kurangani-incident-says-officer


குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை தயாராக உள்ளதாக அதிகாரி அதுல்யா மிஸ்ரா இன்று தெரிவித்துள்ளார்.  

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதிக்கு 38 பேர் அடங்கிய ஒரு பிரிவினர் ட்ரெக்கிங் சென்றனர். அவர் மலையேறி விட்டு திரும்பிய சமயத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது. காட்டுத்தீ வேகமாக பரவியதை அடுத்து முதற்கட்டமாக 10 பேர் மீட்கப்பட்டனர். பின்னர்  இரன்டு நாட்களாக மீட்புப்பணி நடைபெற்றது. இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் உள்பட மொத்தம் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த விபத்து தொடர்பான விசாரணைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை தமிழக அரசு நியமித்தது. தொடர்ந்து அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் விசாரணை செய்து வந்த அவரிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர், "குரங்கணி காட்டுத் தீ தொடர்பான விசாரணை அறிக்கை  தயாராக உள்ளது. அறிக்கையை வருகிற ஜூன் 27ம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்ய உள்ளேன்" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close